மயில்ரங்கம் ஈஸ்வரன் கோவில் திருப்பணி அதிகாரிகள் ஆய்வு

வெள்ளகோவில் மயில்ரங்கம் அமராவதி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தையல்நாயகி உடனமர் வைத்தியநாதேஸ்வரர் கோவில் உள்ளது.;

Update: 2025-03-09 01:47 GMT
இந்த கோவிலுக்கு கடந்த 39 வருடங்களாக கும்பாபிஷேகம் நடத்தவில்லை. இதையடுத்து பல்வேறு கிராம மக்கள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதனால் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனமர் அழகுராஜ பெருமாள் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி வேலைகள் கடந்த வருடம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பணி வேலைகளை இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கோவில் செயல் அலுவலர் ராமநாதன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Similar News