புளியங்குடியில் எலுமிச்சம்பழம் நல்ல விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி

எலுமிச்சம்பழம் நல்ல விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி;

Update: 2025-03-09 06:51 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான எலுமிச்சை சாகுபடி செய்துள்ளனர்எ. தற்பொழுது எலுமிச்சைவெயில் அதிகமாக இருப்பதால் வரத்தும் அதிகமாக உள்ளது வரவுக்கு ஏற்ற விலை இருப்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் இதனால் விளையும் அதிகரிக்க கூடும் என புளியங்குடிஎழுமிச்சை மார்க்கெட்டின் தலைவர் துறை பாண்டியன் புதிய தலைமுறைக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார். அவரிடம் கேட்ட பொழுது இன்னும் விலை அதிகரிக்கக்கூடும் தற்பொழுது நல்ல விளைச்சலுடன் அதிகப்படியாக எலுமிச்சை காய் வரத்து அதிகரித்துள்ளது . மேலும் இந்த வருடத்தில் நோய்கள் தாக்கம் இல்லாமல் எலுமிச்சை நல்லபடியாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது மேலும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல விலை உள்ளது என கூறியுள்ளார். தற்பொழுது எலுமிச்சை அறுபதில் இருந்து 70 ரூபாய் வரை தற்பொழுது விற்பனையாகிறது இன்னும் ஓரிரு நாட்களில் எலுமிச்சின் விலை அதிகரிக்க கூடும் என கூறியுள்ளார். கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு எலுமிச்சையின் வரத்து அதிகரிப்பு என கூறியுள்ளார். வரத்துக்கு ஏற்ற விலை இருப்பதால் எலுமிச்சை மார்க்கெட்டில் களைகட்டும் எலுமிச்சை மார்க்கெட் சந்தை.

Similar News