சிங்காரவேலன் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா!
சின்னமலை சிங்காரவேலன் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஆலங்கநேரி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள சின்னமலை சிங்காரவேலன் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நவகிரக யாகம், லட்சுமி யாகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.