முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் பலி

விபத்து;

Update: 2025-03-10 02:21 GMT
பாபநாசம் அருகே சனிக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது பின்னால் சென்ற லாரி மோதியதில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாபநாசம் வட்டம், இரும்பு தலை கிராமம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிச்சை மகன் விஜய் (30). நீடாமங்கலம் வட்டம், நகா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஜீவேந்திரன் மகன் லிவிங்ஸ்டன் ( 25 ). இவா்கள் இருவரும் ஒரே லாரி கம்பெனியில் லாரி ஓட்டுநா்களாக வேலை பாா்த்து வந்தனா். இந் நிலையில் விஜய், லிவிங்ஸ்டன் இருவரும் தனித் தனி டாரஸ் லாரிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு காரைக்காலில் இருந்து அரியலூருக்கு  சென்று கொண்டிருந்தனா். சனிக்கிழமை இரவு 12.30 மணி அளவில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் புலவா் நத்தம் அருகே இரண்டு லாரிகளும் ஒன்றன் பின் ஒன்றான சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற லாரியை ஓட்டிச் சென்ற லிவிங்ஸ்டன் எதிா் பாராத விதமாக லாரியை பிரேக் போட்டு நிறுத்தினாா். இதை எதிா்பாராமல் பின்னால் வந்த லாரி ஓட்டுநா் விஜய் முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் தான் நான் ஓட்டிச் சென்ற லாரியை மோதினாா். இதில் விஜய் ஓட்டிச்சென்ற லாரியின் முன் பக்கம் சேதம் அடைந்து அதில் சிக்கிய விஜய், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை போலீஸாா், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் உதவியுடன் லாரியின் இடிபாடுகளில் சிக்கி இருந்த விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்ற லிவிங்ஸ்டனிடம் போலீஸாரிடம் விசாரிக்கின்றனா்.

Similar News