இந்தி திணிப்பை கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து மூலனூர் பஸ் நிலையம் முன்பு திமுக பொதுக்கூட்டம்;
மத்திய அரசின் இந்தி திணிப்பு, நிதிப்பகிர்வில் பாரபட் சம், தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை கண்டித்து தி.மு.க. மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தி.மு.க. மாநிலம் இளைஞரணி மற்றும் மூலனூர் பேரூர் கழகம் சார்பில் மூலனூர் பஸ் நிலையம் முன்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார். இதில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, பிரகாஷ் எம்.பி., திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.