தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது
தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது;
கேரளாவில் இளைஞன் இறப்பிற்கு காரணமாக இருந்த பெண்ணிற்கு உடனடியாக தூக்குதண்டனை கிடைத்தது போல் ,தமிழகத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கட்சி சார்புடையவர்களாக இருப்பதால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசால் முடியவில்லை என விருதுநகரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற மகளிர் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்சியில் சட்டமன்ற தொகுதி பெண்கள் பொறுப்பாளர் தனுஷ் மதி பேச்சு... சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் தேசபந்து மைதானம்முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் மகளிர் அணி சார்பில் மகளிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய சட்டமன்ற தொகுதி பெண்கள் பொறுப்பாளர் தனுஷ்மதி, நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதா வீட்டிற்கும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் சுடப்பட்டு இறந்த ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கு முதல் ஆளாக சென்று ஆறுதல் கூறியதும் நம் தளபதி விஜய்தான், அந்த சமயத்தில் கட்சி தொடங்கவில்லை தனிமனிதனாக முதல் ஆளாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது நம் தளபதி விஜய் என்றும் கேரளாவில் இளைஞன் இறப்பிற்கு காரணமாக இருந்த பெண்ணிற்கு உடனடியாக தூக்குதண்டனை கிடைத்தது போல் தமிழகத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை அதற்கு காரணம் அவர்கள் கட்சி யில் தொடர்புடையவர்களாக இருப்பது தான் காரணம் மேலும் பெண்களாகிய நம்முடைய பாதுகாப்புக்கு ரொம்ப முக்கியம் நம்மை ஆளுகிறவர்கள் தான், ஆகவே மகளிர் தினத்திற்கும் அரசியலுக்கு சம்மந்தம் உள்ளது எனவும் அதை பொதுமக்களாகிய நாம் புரிந்து கொள்வது மிக அவசியமான விஷயம் என்றும் பேசினார். பெண்களாகிய நாம் சாலையில் நிம்மதியாக நடந்து செல்லவும், யார் ஆட்சிக்கு வந்தால் பெண்களாகிய நமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதை மனதில் வைத்து, வருகின்ற 2026 ல் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களை நாம் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பது நம் கடமை எனவும் பேசினார் இறுதியாக கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் ஏராளமான பெண்கள் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்