பொருட்காட்சி நுழைவு கட்டணத்தை குறைக்க கூறி மனு
பொருட்காட்சி நுழைவு கட்டணத்தை குறைக்க கூறி மனு;
விருதுநகரில் அரசு உதவிபெறும் kvs மேல் நிலைபள்ளியில் கோடை விடுமுறையின் பொழுது நடத்தப்படும் பொருட்காட்சிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் விருதுநகரில் அரசு உதவி பெறும் கே வி எஸ் மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா புத்தாண்டு கொண்டாட்டம் உணவுத் திருவிழா என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர் இதனை பொதுமக்கள் இலவசமாக கண்டு மகிழ்ச்சி அடைந்த நிலையில் இதே மைதானத்தில் பல வருடங்களாக கோடை விடுமுறையின் பொழுது பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது இந்த பொருட்காட்சி ஆனது தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் நுழைவு கட்டணமாக அதிகபட்சமாக ஒரு நபருக்கு 100 ரூபாயும் குறைந்தபட்சமாக ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது அதேபோல் உள்ளே உள்ள ராட்டினங்கள் மற்றும் உணவுகளுக்கு தனித்தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது இந்த பொருட்காட்சியால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே பொருட்காட்சியின் நுழைவு கட்டணத்தை குறைத்திட வேண்டும் பொருட்காட்சி வளாகத்தில் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.