ஊராட்சியில் முதல் மருத்துவரானவரை உற்சாகமாக வரவேற்ற மக்கள்
ரஷ்யாவில் மருத்துவர் பட்டம் பெற்று ஊராட்சியில் முதல் மருத்துவரான பெண் மருத்துவரை உற்சாகமாக ஆடல் பாடலுடன் வரவேற்று கௌரவித்தனர்;
ரஷ்யாவில் மருத்துவர் பட்டம் பெற்று ஊராட்சியில் முதல் மருத்துவரான பெண் மருத்துவரை உற்சாகமாக ஆடல் பாடலுடன் வரவேற்று கௌரவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் ஊராட்சியை சேர்ந்த N.டில்லி குமார் D.சாரோன் பெமிளா அவர்களின் மகள் மருத்துவர் D. நிவேதா டாக்டர் பட்டம் பெற்றதற்கான பாராட்டு விழா இன்று கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் கிராம மக்கள் உறவினர்கள் உற்சாகமாக ஆடல் பாடலுடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்று ஆரத்தி எடுத்தும் கேக் வெட்டியும் அவரை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர் அவரை திருவள்ளூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் வாழ்த்தினார் ரஷ்யாவில் மருத்துவர் பட்டம் பெற்று ஊராட்சியின் முதல் மருத்துவரான டாக்டர் நிவேதாவை பாராட்டி கௌரவத்தினர்