விடுதி காப்பாளர்களுக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
விடுதிகளை நன்முறையில் நிர்வகித்த காப்பாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த விடுதிகள் மற்றும் அவ்விடுதிகளை நன்முறையில் நிர்வகித்த காப்பாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார். இதில், டிஆர்ஓ மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.