சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா!
ரூ.85 லட்சம் செலவில் புதியதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் இன்று அடிக்கல் நாட்டினார் .;
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 47 வேலப்பாடி பகுதி வரதராஜ பெருமாள் கோயிலில் சட்டமன்ற நிதியில் ரூ.85 லட்சம் செலவில் புதியதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா இன்று நடந்த விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இதில் பகுதி கழக செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன், கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.