மாடு விடும் திருவிழா கோலாகலம்!
கே.வி.குப்பம் வட்டம் வேலம்பட்டு கிராமத்தில் மாடுவிடும் திருவிழா இன்று நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் வேலம்பட்டு கிராமத்தில் மாடுவிடும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காளைகள் கலந்து கொண்டன. சிறப்பாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினர், மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.