ராமபட்டினத்தில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காங்கேயம் ராமபட்டினத்தில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா;

Update: 2025-03-11 00:47 GMT
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை கிராமம் ராமபட்டினத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ முருங்கையம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆகிய 4 கோவில்கள் புதி தாககட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிவாச்சா ரியார்கள் மூலம் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், ராமபட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க சாமியை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோ பூஜை, மகாஅபிஷேகம், அலங்கார பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக வள்ளி கும்மியாட்டம், 4 கால பூஜைகள் உள்பட பெருஞ் சலங்கையாட்டம் நடந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை தொடர்ந்து நேற்று இரவு முதல் 48 நாட்களுக்கான மண்டல பூஜை நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News