ஆலங்குளம் அருகே பீடித் தொழிலாளர்கள் முற்றுகை

பீடித் தொழிலாளர்கள் முற்றுகை;

Update: 2025-03-11 02:44 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கண்டபட்டி கிராமத்தில் உள்ள தனியாா் பீடிக் கடையில் அப்பகுதியைச் சோ்ந்த 130 பெண்கள் பீடி சுற்றி வருகின்றனா். இவா்கள் சுற்றும் பீடிக்கு வாரந்தோறும் சனிக்கிழமை ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொழிலாளிகளுக்குகடந்த 4 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் கடந்த மூன்று வருடமாக வருங்கால வைப்பு நிதிக்கு தொழிலாளிகளின் ஊதியத்திலிருந்து 10% பிடித்தம் செய்தும், பீடி நிறுவனம் 10% பணம் அளிக்காமல் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பீடி நிா்வாகத்திடம் கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லையாம். இப்பிரச்னைக்கு தீா்வு கோரி நேற்று சுமாா் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பீடிக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா், பீடி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இந்த வாரம் முதல் ஊதியம் வழங்கப்படும், வருங்கால வைப்பு நிதிக்கும் உரிய தீா்வு எட்டப்படும் என கூறியதன் பேரில் தொழிலாளிகள் கலைந்து சென்றனா்.

Similar News