பெரியகுளம் சார் ஆட்சியர் நேற்று (மார்.10) மாவட்ட நீதிமன்றம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக டிப்பர் லாரி ஒன்றினை மடக்கி சோதனை செய்தனர். இந்த சோதனையில் லாரியில் முறைகேடாக 3.5 டன் கிராவல் மண் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரில் லாரியை பறிமுதல் செய்த தென்கரை போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.