கார்களின் கண்ணாடியை உடைத்தவர் கைது

கைது;

Update: 2025-03-11 09:29 GMT
கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபரின் கார் கண்ணாடியை நேற்று (மார்.10) மர்ம நபர் ஒருவர் உடைத்து சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அதே பகுதியை சேர்ந்த தேவா என்பவர் கார்களின் கண்ணாடியை உடைத்ததை தெரியவந்தது. இது குறித்த புகாரில் கூடலூர் வடக்கு போலீசார் தேவாவை கைது செய்தனர்.

Similar News