தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை 

கோரிக்கை;

Update: 2025-03-11 15:51 GMT
பருவம் தவறி பெய்யும் மழையினால் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் மற்ற பயிர்களுக்கும் உடன் கணக்கீடு செய்து தமிழ்நாடு அரசு  இழப்பீடு வழங்கிட வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கக்கூடிய நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் பாதுகாக்கவும்  தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,  "தற்போது தஞ்சை மாவட்டத்தில் மேல் அடுக்கு வளிமண்டல சுழற்சியின் காரணமாக பெய்து வரும் மழையினால் சுமார் 4,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்கள் பாதித்துள்ளது. மேலும் எள், உளுந்து, நிலக்கடலை, பருத்தி சாகுபடி பயிர்களும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற வகையில் இருக்கின்றது.  இதை பாதுகாக்கவும், இயக்கம் செய்யவும் தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Similar News