திருப்பூர் மலையம்பாளையத்தில் இல்லாத ஊருக்கு மைல்கல்

திருப்பூர் மலையம்பாளையத்தில் இல்லாத ஊருக்கு மைல்கல் குழப்பம் அடைந்த வாகன ஓட்டிகள்;

Update: 2025-03-12 00:21 GMT
திருப்பூர் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்குட் பட்ட மலையம்பாளையம் பிரிவிலிருந்து மலையம்பாளையம் வரை 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நபார்டு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ.85 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் சமீபத்தில் சாலை போடப்பட்டது. இந்த சாலையில் மலையம்பாளையம் பிரிவு அருகே புதிதாக ஒரு மைல் கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த மைல் கல்லில் வளர்புரம் 2 என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது வளர்புரத்துக்கு 2 கிலோ மீட்டர் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு ஊரே இல்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த சாலை புதிதாக போடப்பட்டு 2 மாதங்கள் ஆகின்றன. இந்த சாலையில் உள்ள மைல்கல்லில் இல்லாத ஊரின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக வரும் வாகன ஓட்டி களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையில் இது உள்ளது. இந்த சாலையை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு இது தெரியவில்லையா? எப்படி அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. எனவே தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தவறுதலாக உள்ள ஊரின் பெயரை நீக்கவும் நடவடிக்கை வேண்டும் என்றனர்.

Similar News