ஆண்டிபட்டி காவல் நிலைய போலீசார் சட்டவிரோத லாட்டரி விற்பனை சம்பந்தமாக நேற்று(மார்ச்.11) ரோந்து மேற்கொண்டனர். அப்பொழுது வேலப்பர் கோவில் ரோட்டில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த முருகன்(51) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பறிமுதல் செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.