ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் மலை அடிவாரத்தில் ஒண்டிவீரன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவிலில் இருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து ஊர் பெரியவர்கள் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த மாயன் என்பவர் சிலையை தான் உடைத்ததாக கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் மாயனை (மார்ச்.11) நேற்று கைது செய்தனர்.