திண்டிவனத்தில் திமுக ஐடிவிலங் சார்பில் ஆலோசனை கூட்டம்

முன்னாள் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-03-12 08:35 GMT
மயிலம், திண்டிவனம் சட்டசபை தொகுதிகளுக்கான தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.திண்டிவனத்தில் நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோமியன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் தலைமை தாங்கி, முதல்வர் கொண்டு வந்த நலத்திட்டங்களையும், தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனைகளையும் பொது மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என பேசினார்.கூட்டத்தில், திண்டிவனம் தொகுதி பார்வையாளர் ஜாபர் அலி, மாவட்ட பொருளாளர் ரமணன், துணை செயலாளர் ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், ராஜாராம், மணிமாறன், பழனி, வழக்கறிஞர் அசோகன், மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ், நகர துணை செயலாளர் கவுதமன், அணையேரி பஞ்சாயத்து தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News