குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் நல்ல பெருமாள் (71). நேற்று மாலை வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தக்க லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று நல்ல பெருமாள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சுங்கான் கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் இரணியல் போலீசார் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கிரண் சாஜி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.