தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் பணியிட மாற்றம் 

பணியிட மாற்றம் ;

Update: 2025-03-12 13:40 GMT
தஞ்சை மாவட்டத்தில், வட்டாட்சியர் நிலையில் பணி புரியும் 26 பேர்களை பணி மாறுதல் மற்றும் நியமனம் செய்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதன்படி திருவையாறு தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) கலைச்செல்வி பூதலூர் வட்டாட்சியராகவும், திருவையாறு முன்னாள் வட்டாட்சியர் தர்மராஜ் படடுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், திருவோணம் முன்னாள் வட்டாட்சியர் முருகவேல் கும்பகோணம் தனி வட்டாட்சியராகவும் (முத்திரைக்கட்டணம்), பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் சுமதி பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலராகவும், தஞ்சை ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) அழகேசன் தஞ்சை ஆட்சியர்  அலுவலக தனி வட்டாட்சியராகவும் (பேரிடர் மேலாண்மை), தஞ்சை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் இளங்கோ பாபநாசம் நெடுஞ்சாலைகள் திட்டங்கள் (நில எடுப்பு) தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் பூங்கொடி கும்பகோணம் தனி வட்டாட்சியராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), பூதலூர் தனி வட்டாட்சியராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜானகிராமன் பாபநாசம் தனி வட்டாட்சியராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் பிரேம்குமார் தஞ்சை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், பேராவூரணி தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தகுமார், திருவோணம் தனி வட்டாட்சியராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தஞ்சை தனி வட்டாட்சியராகவும் (ஆதிதிராவிடர் நலம்), பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் ரகுராமன் ஒரத்தநாடு தனி வட்டாட்சியராகவும்(சமூக பாதுகாப்பு திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பேராவூரணி வட்ட வழங்கல அலுவலர் வெங்கடாச்சலம் கும்பகோணம் நெடுஞ்சாலை திட்டங்கள்(நிலஎடுப்பு) தனி வட்டாட்சியராகவும், பாபநாசம் நெடுஞ்சாலை திட்டங்கள்(நிலஎடுப்பு) தனி வட்டாட்சியர் கண்ணன் பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியராகவும் (ஆதிதிராவிடர் நலம்), கும்பகோணம் தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) ரீட்டா ஜெர்லின் தஞ்சை டாஸ்மாக் லிமிடெட் கிடங்கு மேலாளராகவும், தஞ்சை தனி வட்டாட்சியர் (நகர நிலவரி திட்டம் அலகு-1) பெர்சியா திருவையாறு தனி வட்டாட்சியராகவும் (ஆதிதிராவிடர் நலம்), தஞ்சை தனி வட்டாட்சியர் (நகர நிலவரி திட்டம் அலகு-2) பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியராகவும் (முத்திரைக்கட்டணம்) பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் (முத்திரைக்கட்டணம்) வெங்கடேஸ்வரன் தஞ்சை ஆட்சியர் அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்), பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) ராமச்சந்திரன் பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலராகவும், கும்பகோணம் தனி வட்டாட்சியர் (முத்திரைக்கட்டணம்) சந்தானவேல் தஞ்சை தனி வட்டாட்சியராகவும் (நகர நிலவரித்திட்டம் அலகு-2), தஞ்சை டாஸ்மாக் லிமிடெட் கிடங்கு மேலாளர் பிரேமாவதி ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராகவும், தஞ்சை டாஸ்மாக் லிமிடெட் உதவி மேலாளர் அருணகிரி பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியராகவும் (நகர நிலவரித்திட்டம் அலகு-1) பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை தனி வட்டாட்சியர் (கேபிள் டி.வி) ரத்தினவேல் தஞ்சை மாநில நெடுஞ்சாலை (நிலஎடுப்பு) தனி வட்டாட்சியராகவும், தஞ்சை மாநில நெடுஞ்சாலை (நில எடுப்பு) பூவந்திநாதன் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக மாநில நெடுஞ்சாலை (நிலஎடுப்பு) தனி வட்டாட்சியராகவும், தஞ்சை மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை வட்டாட்சியர் மலர்குழலி தஞ்சை தனி வட்டாட்சியராகவும் (கேபிள் டி.வி.), பேராவூரணி நெடுஞ்சாலை திட்டங்கள் (நில எடுப்பு) முன்னாள் தனி வட்டாட்சியர் மணிகண்டன் தஞ்சை டாஸ்மாக் லிமிடெட் உதவி மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News