திமுக நடத்திய இஃப்தார் விருந்தில் மும்மதத்தினர் பங்கேற்பு
மயிலாடுதுறையில் சமுதாய சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் திமுக சார்பில் நோன்பு (இஃப்தார்) துறப்பு நிகழ்ச்சி. மும்மதத்தினர் பங்கேற்பு;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் சமுதாய சமூக ஒற்றுமையை நிலை நாட்டும் வகையில் நோன்பு (இஃப்தார்) துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் மும்மதத்தினவர்களான திருக்கயிலாயப் பரம்பரை தருமையாதினத்தின் கட்டளைத் தம்பிரான் ஸ்ரீ சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை தார்சிஸ் அடிகளார், நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா அரபிக் கல்லூரி மாவட்ட தலைமை காஜி. முகமது இஸ்மாயில் பாஜில் பாகவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அனைத்து சமுதாய இதயங்களை இணைக்கும் வகையில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து இஃதார் நோன்பு திறக்கப்பட்டது. இதில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹர்ஷத், மலேசிய தொழிலதிபர் முகமது பாரூக் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், வர்த்தகர்கள் தொழிலதிபர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.