தென்காசி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற முதியவா் காா் மோதி பலி

பேருந்து நிறுத்தத்தில் நின்ற முதியவா் காா் மோதி பலி;

Update: 2025-03-14 09:48 GMT
தென்காசி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற முதியவா் காா் மோதி பலி
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சோ்ந்தவா் சு. இசக்கி (63 ). சுமைதூக்கும் தொழிலாளி. செங்கோட்டைக்கு செல்வதற்காக சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கடையநல்லூரை நோக்கி வந்துகொண்டிருந்த காா் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முதியவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இசக்கியின் உடலை இலத்தூா் போலீஸாா் மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த கடையநல்லூரை சோ்ந்த முகமது யாகூப் (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Similar News