மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு ஜேசிபி இயந்திர ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
வழக்குப்பதிவு;

பெரியகுளம் அருகே குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (21). இவர் நேற்று (மார்.13) மேல்மங்கலம் பகுதியில் பைப் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஜேசிபி பக்கெட்டில் நின்று வேலை பார்த்த முத்துப்பாண்டி மீது அருகில் இருந்த மின் வயர் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் முத்துப்பாண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஜெயமங்களம் போலீசார் ஜேசிபி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.