
சின்னமனூர் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சின்னமனூர் மார்க்கையன்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பெண்கள் கழிப்பிடம் அருகே பேச்சியம்மாள் (75) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பேச்சியம்மாள் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.