அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டி திடீர் தீ விபத்து பரபரப்பு
திருத்தணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் இருந்த பகுதியில் குளிர்சாதன பெட்டி திடீர் தீ விபத்து அலறி அடித்து வெளியேறிய கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் பரபரப்பு;
திருத்தணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் இருந்த பகுதியில் குளிர்சாதன பெட்டி திடீர் தீ விபத்து அலறி அடித்து வெளியேறிய கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரசினர் மாவட்ட மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக பெண்கள் ஆண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இதே பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் உள் நோயாளிகளாக உள்ளனர் இவர்கள் இருக்கும் பகுதியில் மருந்துகள் வைத்திருந்த குளிர்சாதன பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ பரவி உள்ளது இதனைக் கண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு அவர்களுடன் இருந்த உறவினர்கள் அனைவரும் அவசரமாக வெளியேறி உள்ள இவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர்களும் மற்றும் பயிற்சி கல்லூரி செவிலியர்களும் அவசரமாக அனைவரும் வெளியேறினார்கள்.பயிற்சி கல்லூரி செவிலியர்கள் மொத்தமாக வெளியேறி வீட்டுக்கு சென்று விட்டனர் பயத்தில் இவர்கள் சென்றதால் அச்சமடைந்த கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரும் மருத்துவமனை பகுதியில் அவர்கள் அனைவரையும் மருத்துவமனை நிர்வாகம் தங்க வைத்தனர் மருத்துவமனை உள்பகுதியில் குளிர்சாதனப்பெட்டி தீ பற்றி எரிந்த பகுதியில் மின் சாதன பெட்டியில் தீயணைப்பு கருவியை வைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் ஊழியர்கள் தீயை அணைத்தனர் பெரும் அசம்பாவித ஏற்படாமல் தவிர்த்தனர் இதன்பின்பு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மின்சாதன வயர் மற்றும் குளிர்சாதன பெட்டி எறிந்த பகுதியில் கடும் புகைமூட்டம் இருந்ததால் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதியில் இருந்த கண்ணாடி கதவினை உடைத்து புகை வெளியேறுவதற்கு வழிவகை செய்தனர் இதனால் அரசு மருத்துவமனையில் அதிர்ஷ்டவசமாக இந்த பெரும் தீ விபத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை இதனால் திருத்தணி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.