குளிக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
திருச்சி அருகே சமயபுரத்தில் குளிக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்;
திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் சேட்டு. சுவர் களில் விளம்பர படம் வரையும் தொழிலாளி. இவரது மகன் விஜயராக வன் (வயது 18).10-ம் வகுப்பு வரை படித்து விட்டு இவர் தந்தைக்கு உதவியாக வேலைகள் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவர் அங்குள்ள ஒரு பம்பு செட்டில் குளிப்பதற்காக சென்றார். இதற்காக பம்பு செட்டின் சுவிட்சை போட்ட போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்து வமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாப மாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் அங்கு சென்று விஜயராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.