பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
மதம், இனம், சாதி என்ற எந்த பாகுபாடும் இன்றி, நாம் அனைவரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோம் என்று, இந்த சமூக நல்லிணக்க விழாவில் உறுதி ஏற்போம்.;
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மார்ச் 13, 2025 அன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்க்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார். இந்த விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், மதிப்பிற்குரிய ஆசிரியர்கள், அன்பிற்குரிய மாணவ மாணவிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். இன்று, நமது பல்கலைக் கழகத்தில், நம்பிக்கை மற்றும் மத எல்லைகளை தாண்டி ஒற்றுமை, அன்பு, பாசம் மற்றும் உயர்ந்த புரிதல் உணர்வோடு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை கொண்டாட ஒன்று கூடியுள்ளோம். இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது ஒரு மத நிகழ்வு என்று எண்ணாதீர்கள்; இது சமூகத்தில், ஒற்றுமை மற்றும் மனிதர்களாக, நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கும், மனித நேயத்தை முன்னிறுத்தும் ஒரு விழா ஆகும். இந்த புனிதமான விழாவில் கலந்துகொள்ள வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நமது பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்த உன்னதமான மத நல்லிணக்க விழாவில் கலந்து கொள்வதில் நான் உண்மையிலேயே மிகவும் பெருமைப்படுகிறேன். நாம் ஒன்றாக கூடியிருக்கும் இந்த நேரத்தில், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களுக்கு, இது ஒரு புனித மாதமாகும். இந்த காலம் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலம் ஆகும். மேலும் ஆன்மீக வளர்ச்சி மற்றும் தொண்டு செயல்களுக்கு நேரம் ஒதுக்கி ஈகை, மற்றும் இரக்க உணர்வோடு மக்கள் நல்வாழ்வுக்கு நம்மை அர்ப்பணிக்கும் காலம் ஆகும். பல்வேறு நம்பிக்கைகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளால் இந்த உலகம் அடிக்கடி சொல்லமுடியாத இன்னல்களை சந்தித்து வருவதை நாம் அறிவோம், இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நம்முடைய ஒற்றுமை மற்றும் ஒற்றுமையின் சக்தியை உலகுக்கு கொண்டு சென்று மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்தோடு வாழ ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். இன்று இங்கு கூடியிருக்கும் பலதரப்பட்ட முகங்களைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமது பல்கலைக்கழகத்தில் பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகளை சார்ந்த மாணவர்கள் பயில்கிறார்கள், நமது பல்கலைக்கழகம் எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமல் மதச் சார்பின்மையை கடைப்பிடித்து அனைத்து மதங்களின் உணர்வுகளை மதித்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் பல்கலைக்கழகமாகும். நாம் ஒன்றாக நோன்பு திறக்கும் இந்த நிகழ்வானது, நமது உடல் ஆரோக்கியம் சம்மந்தமானது மட்டுமல்ல, நமது உள்ளத்தின் தூய்மையையும் மேம்படுத்தும் நிகழ்வு என்று நான் முழுமையாக நம்புகிறேன். பரஸ்பர மரியாதை மற்றும் சரியான புரிதலின் அடிப்படையில், மதம், இனம், சாதி என்ற எந்த பாகுபாடும் இன்றி, நாம் அனைவரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோம் என்று, இந்த சமூக நல்லிணக்க விழாவில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் ரமலான் முபாரக், அமைதியும், அன்பும் நிரம்பிய உலகை நாம் அனைவரும் உருவாக்குவோம்! இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் ஜமாஅத்துல் உலமா சபை, பெரம்பலூர் மாவட்ட தலைவர் மௌலானா, மௌலவி எப் முஹம்மது முனீர் ஹஜ்ரத் அவர்கள் முன்னிலை வகித்து பேசுகையில்"நாம் ஒன்றாக கூடியிருக்கும் இந்த நேரத்தில், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களுக்கு, இது ஒரு புனித மாதமாகும். இந்த காலம் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலம் ஆகும். மேலும் ஆன்மீக வளர்ச்சி மற்றும் தொண்டு செயல்களுக்கு நேரம் ஒதுக்கி ஈகை, மற்றும் இரக்க உணர்வோடு மக்கள் நல்வாழ்வுக்கு நம்மை அர்ப்பணிக்கும் காலம் ஆகும். பல்வேறு நம்பிக்கைகள், கருத்துவேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளால் இந்த உலகம் அடிக்கடி சொல்லமுடியாத இன்னல்களை சந்தித்து வருவதை நாம் அறிவோம், இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நம்முடைய ஒற்றுமை மற்றும் ஒற்றுமையின் சக்தியை உலகுக்கு கொண்டு சென்று மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்தோடு வாழ ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் அ. கா. காஜா நஜுமுதின், ரோவர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வரதராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சிவசுப்ரமணியம், திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்வி நிறுவனங்களின் அருள்முனைவர் டாக்டர் பவுல்ராஜ் மைக்கேல் சே.ச . மற்றும் பெரம்பலூர் மறைவட்ட குரு , பங்குத்தந்தை பேரருட் திரு. எ சுவக்கின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ், பெரம்பலூர், லப்பைக்குடிக்காடு, வி. களத்தூர், முஹம்மதுபட்டினம், வலிகண்டபுரம், துறைமங்கலம், செஞ்சேரி, அரும்பாவூர், பூலாம்பாடி, விஸ்வக்குடி ஆகிய ஊர்களின் பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர், புலமுதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவங்களின் முதல்வர்கள், துணைமுதல்வர்கள், புலமுதல்வர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 5000 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.