குழாய் உடைந்து குடிநீர் வீண் ஆதித் தமிழர் கட்சியினர் புகார்
குழாய்கள் உடைப்பால் குடிநீர் வீணாகி வருவதை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது;
தாராபுரத்தில் குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் நேற்று ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தாராபுரத்தில் இருந்து தாராபுரம் நகர் புறத்தில் இருக்கும் பூளவாடி செல்லும் சாலை வழியாக மேற்கு கள்ளிப்பாளையம் வரை செல்லும் அமராவதி கூட்டுக் குடிநீர் குழாய் மூலம் சுமார் 35 கிராமங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது. இந்த நிலையில் உப்பாறு அணையில் இருந்து மேற்கே மருதூர் கிராமம் வரை சுமார் 10 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகு வதை தடுத்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அதுமட்டுமின்றி தற்போது கோடைகாலம் ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படு வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.