நமது கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் கோவை செழியன் நினைவு நாள் அனுசரிப்பு
நமது கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் கோவை செழியன் நினைவு நாள் குங்காரு பாளையத்தில் அனுசரிப்பு;
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனரும், காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திரைப்படத்துறை அல்லாது அரசியலிலும் கால்பதித்து எண்ணற்ற சாதனைகள் படைத்து மறைந்த கோவை செழியனின் 25-ம் ஆண்டு நினைவு தினமான நேற்று நமது கொங்கு முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் காங்கேயம் எம்.தங்கவேலு தலைமையில் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நமது கொங்கு முன்னேற்றக் கழக மாநில அமைப்பாளர் சென்னிமலை வடிவேலு, மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.கமல்ராஜ், ஒன்றிய அமைப்பாளர் வாழைமரத்தோட்ட கணேஷ், திருப்பூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நவீன் எம்.எஸ்.மனோகரன், சைக்கிள் மோகன், எல்.ஐ.சி. தங்கமணி, சவுந்தர்ராஜ், மஜீத் வீதி பாலாஜி, நடராஜ் ஆகி யோர் முன்னிலை வைத்தனர். மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கோவை செழியன் உழைப்பை முன் உதாரணமாகக் கொண்டு அவரின் உழைப்பையும், விடாமுயற்சியையும் கடைப்பிடித்து நமது நாட்டின் அனைத்து சமுதாயத்தின் ஒற்றுமையை பேணி காத்தும், கொங்கு மண்டலம் அல்லாத தமிழ்நாடு முழுவதும் அவர் வழியில் பயணம் செய்வோம் என அனைவரின் சார்பாக சூழுரைக்கப்பட்டது.