சேலம் புதிய மாநகராட்சி ஆணையாளருக்கு

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாழ்த்து;

Update: 2025-03-15 03:19 GMT
சேலம் மாநகராட்சி புதிய ஆணையாளராக இளங்கோவன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, கொறடா கே.சி.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து வ.உ.சி. பூ மார்க்கெட் ஏலம் விடுவதில் விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆனைவரதன், ஜனார்த்தனன், சந்திரா, சசிகலா, மோகனபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News