சேலத்தில் உலக நுகர்வோர் தினவிழா

பெண்களுக்கு பரிசு;

Update: 2025-03-15 03:24 GMT
நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் உலக நுகர்வோர் தினவிழா சேலம் சாரதா மகளிர் கல்லூரியில் நடந்தது. அமைப்பு நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர் சங்கீதா, துணைத்தலைவர் கோபி ஆகியோர் காலநிலை மாற்றம் குறித்து பேசினர். சேலம் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் விஜயமுருகன், அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேலம் வட்ட வழங்கல் அலுவலர் காயத்ரி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து காலநிலை மாற்றமும், சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நுகர்வோர் உரிமைகள் தொடர்பான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மகளிர் தின பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வெங்கடேசன், செல்வம், சரவணன், பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News