தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் லலிதா (60). இவர் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் சம்பவ நாளன்று இவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் லலிதாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுத்து வர லலிதா சென்ற போது அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட காளியப்பனை நேற்று (மார்.14) கைது செய்தனர்.