
போடி நகர் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.14) குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் லிங்கன், வேல்முருகன், ரவிச்சந்திரன் ஆகியோர் பணம் வைத்து சீட்டு ஆடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்