தமிழக வெற்றிக் கழக திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி இன்று (மார்ச் 15) மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் சஜியில் காலமானது மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கின்றது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.