சிறுமிக்கு பாலியல் தொல்லை இருவர் கைது
மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்:-;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரை வல்லம் சேத்தி தெருவை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன்கள் அபிமன்யு, முத்தரசன் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர், அச்சிறுமியின் பெற்றோர மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அபிமன்யு வலுக்கட்டாயமாக தன்னை பலாத்காரம் செய்ததாகவும், இதற்கு முன்பு அபிமன்யுவின் அண்ணன் முத்தரசன் கையை பிடித்து இழுத்ததாகவும் இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் சண்டை வரும் என்பதால் பயந்து வீட்டில் சொல்லவில்லை என சிறுமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சகோதரர்கள் அபிமன்யு(23) முத்தரசன்(28) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர்.