மண்டைக்காடு:  மனைவி, மாமனார் மீது தாக்குதல்

4 பேர் மீது வழக்கு;

Update: 2025-03-15 12:20 GMT
குமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (68). விவசாயி. இவரது மகள் தீபாவுக்கும் மண்டைக்காடு அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளி சங்கர் (40) என்பவருக்கும் திருமணம் ஆனது. தற்போது கணவன் மனைவி  கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.       இந்த நிலையில் சம்பவத்தினம்  ராமச்சந்திரன் தீபா ஆகியோர் சேரமங்கலத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சங்கர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினம், பவின் மற்றும் கண்டால் தெரியும் நபர் என நான்கு பேருடன்  சேர்ந்து தகராறில் ஈடுபட்டு ராமச்சந்திரனை தாக்கியுள்ளனர். சங்கர் தனது மனைவி தீபாவை காலால் மதித்து தள்ளி மிரட்டல் கொடுத்துவிட்டார்.        இதில் தந்தை மகள் காயமடைந்தனர். இது குறித்து ராமச்சந்திரன் மண்டைக்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்  பேரில் போலீசார் சங்கர், ரத்தினம், பவின் மற்றும் கண்டால் தெரியும் நபர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News