வெள்ளகோவில் கடைவீதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

வெள்ளகோவில் கடைவீதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

Update: 2025-03-15 14:33 GMT
வெள்ளகோவில் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. புதிய பஸ் நிலையம் - கரூர் சாலை செல்லும் வழியில் ஐ.டி.பி.ஐ. வங்கி எதிர்புறம் உள்ள ஒரு காய்கறி கடை அருகில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் சாலையில் வெளியேறி வருகிறது. போக்கு வரத்து மிகுந்த இந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது அருகில் செல்வபவர் மீது தண்ணீர் வாரி இறைக்கப்படுகிறது. மேலும் தண்ணீர் வரும் இடத்தில் குழி ஏற் பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் பற்றாக் குறை இருக்கும் சூழ்நிலையில் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Similar News