அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி

காங்கேயத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி;

Update: 2025-03-15 14:43 GMT
காங்கேயம்-பழையகோட்டை சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு காங்கேயம் பகுதியில் இருந்து சுமார் 300 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த வருடத்தை விட கூடுதல் மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்த சாலைப் பேரணி நடத்தப்பட்டது. காங்கேயம் நகரப்பகுதியை சுற்றி  பேனர்கள், பதாகைகள் பிடித்தபடியும், முழக்கங்களை கோஷமிட்டவாரும் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் தலைமை ஆசிரியர் பிரபாவதி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News