நிலக்கடலை பயிர்களை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வேண்டிய தொழில்நுட்பங்களை வழங்கினர்;

Update: 2025-03-16 03:04 GMT
துறையூர் வட்டாரம் பச்சைமலை கிராம பகுதியில் விவசாயிகளின் வயல்களில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுகமணி வேளாண்மை அறிவி யல் நிலையம் மூலம் நிலக்கடலை செயல்விளக்க திடல் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 50 விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடிக்கு தேவையான நிலக்கடலை விதை, நிலக்க டலை ரிச் பூஸ்டர், டிரைகோடெர்மா உயிர் உரம், வேப்பெண்ணெய் மற்றும் மண்புழு உரம் போன்ற இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வயல்களை சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு மற்றும் இணைப் பேராசிரியர் மாரி முத்து, வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வேண்டிய தொழில்நுட்பங்களை வழங்கினர்.

Similar News