ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆல்வின். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வையாபுரி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக நேற்று (மார்.15) ஆல்வின் குடும்பத்தாரை வையாபுரி அவதூறாக பேசியதுடன் அவர்களை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வையாபுரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்