ஜெயமங்கலம் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது

கைது;

Update: 2025-03-16 11:31 GMT
ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸ் நேற்று (மார்.15) சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக ரெங்கநாதபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் அவரது வீட்டில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News