தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
தீயணைப்பு துறையும், வனத்துறையும் இணைந்து பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு;

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாச்சலூர் மலை கிராமம் உள்ளது. இக்கிராமம் செல்லும் பாதையில் வடகாடு பகுதியில் தீயணைப்பு துறையும், வனத்துறையும் இணைந்து பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வருகின்ற வெப்ப அலை கடுமையாக இருப்பதால், காட்டு தீ காற்றால் எப்படி பரவுகிறது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.