விளாப்பாக்கம்:சேதமடைந்த நிழற்குடை சரி செய்ய கோரிக்கை!
விளாப்பாக்கம்:சேதமடைந்த நிழற்குடை சரி செய்ய கோரிக்கை!;

திமிரி அடுத்த விளாப்பாக்கம் கூட்ரோட்டில் பயணியர் நிழற்குடை உள்ளது. இதன் பின்பக்க சுவர்கள் முழுவதும் சேதம் அடைந்து பெரியஓட்டை போன்று காணப்படுகிறது.பயணிகள் அமர்வதற்காக கட்டப்பட்ட நிழற்குடையின் இருக்கையில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அப்படியே விட்டு செல்கின்றனர். பயணியர் நிழற்குடையின் அருகில் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தினந்தோறும் அவ்வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் செல்வதால் மது பாட்டில்களை பார்த்து, மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயணியர் நிழற்குடையை உடனடியாக சீரமைப்பதுடன், அதில் மதுப்பிரியர்கள் மது அருந்துவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாணவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.