ராணிப்பேட்டை அருகே லாரி டயரில் சிக்கி ஒருவர் பலி!
லாரி டயரில் சிக்கி ஒருவர் பலி;
குடியாத்தம் தாலுகா நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 41). ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது எதிர்பாராத விதமாக அக்ராவரம் பகுதியில் லாரியில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் விரைந்து சென்று மோகன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.