திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.;

Update: 2025-03-16 21:11 GMT
திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
  • whatsapp icon
திருச்சி வனக்கோட்டத்துக்குட்பட்ட செங்காட்டுப்பட்டி, சோலமாத்தி, மாரமரெட்டிபாளையம், மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி உள்ளிட்ட 14 புகா் பகுதி காப்புக் காடுகளிலும், 6 நகா்ப்புறங்களிலும் நிலப்பறவை கணக்கெடுப்புப் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிறவைடைந்தது. மாவட்ட வன அலுவலா் கிருத்திகா தலைமையில் நடந்த இக்கணக்கெடுப்பில் உதவி வனப் பாதுகாவலா்கள் சரவணகுமாா், காதா்பாட்ஷா மேற்பாா்வையில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட வனத்துறை களப்பணியாளா்கள், பிஷப் ஹீபா், ஜமால் முகமது, நேருநினைவுக் கல்லுாரிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாணவ, மாணவிகள் உள்பட 60-க்கும் மேற்பட்ட இயற்கை தன்னாா்வலா்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பறவைகள் ஆராய்ச்சியாளா்கள் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். கணக்கெடுப்பில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்களுக்கு வனத்துறை சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில், பறவை இனங்கள், பறவைகளின் எண்ணிக்கை, புதிய வரவுகள், குடிபெயந்தவை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை குறித்த விவரங்கள் அடங்கிய தகவல்கள் சரிபாா்ப்புக்குப் பின்னா் வெளியிடப்படும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

Similar News