திருச்சி : ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.;

Update: 2025-03-16 21:44 GMT
திருச்சி : ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
  • whatsapp icon
திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 18, 20, 23, 25, 28, 31 ஆகிய தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) வரும் 18 ஆம் தேதி ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 20, 28 ஆம் தேதிகளில் கரூா் - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News