தாராபுரத்தில் விசிக கட்சி சார்பில் இப்தார் நோன்பு
தாராபுரத்தில் விசிக கட்சி சார்பில் இப்தார் நோன்பு. ஹாஜியானா திருமண மண்டபத்தில்சமுதாய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

புனித ரமலான் மாதத்தையொட்டி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் ஹாஜியானா திருமண மண்டபத்தில் சமுதாய நல்லிணக்கஇப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமை வகித்தார்.இதில் அனைத்து பள்ளி முத்தவல்லிகள், மற்றும் செயலாளர்கள், நிர்வாகிகள் தாராபுரம் வட்டார உலமாக்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள். 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.வி.சி.க அமைப்புச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்நாசர் சிறப்புரையாற்றினார். அதில் பேசிய பேது இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. எங்களது கட்சியினுடைய இஸ்லாமிய நண்பர்கள் கடந்த 21- வருடங்களாக நோன்பினை கடைபிடித்து வருகினற்னர். சமுதாய நல்லிணக்கத்தையும் மத வேறுபாடு இன்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என எல்லோரும் சமமாக அமர்ந்து நோன்பு திறந்தோம் புனித ரமலான் மாதத்தில் அதிகாலை 5 மணிக்கு நோன்பை கடைப்பிடித்து பிறகு மாலை 6:37 மணி வரை உண்ணா நோன்பு இருந்து இஸ்லாமியர்கள் புனித ரமலான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இறைவன் அருளிய இந்த புனித ரமலான் மாதத்தில் மனித நேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம் என இவ்வாறு தெரிவித்தார்.