சேலம் அருகே சரக்கு வேன் மோதி கொத்தனார் சாவு

போலீசார் விசாரணை;

Update: 2025-03-17 03:22 GMT
பனமரத்துப்பட்டி அருகே ஜல்லூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் அஜித் (வயது 23), கொத்தனார். அஜித் நேற்று மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து பனமரத்துப்பட்டியில் இருந்து ஜல்லூத்துப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் குரால்நத்தம் அருகில் சென்ற போது எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜித் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News